மனம் மகிழுங்கள் புத்தகம் வெளியானது

Written by நூருத்தீன். Posted in பொது

நூருத்தீன் எழுதிய ‘மனம் மகிழுங்கள்’ இந்நேரம்.காம் எனும் இணையதளத்தில் வெளியான ஓர் உற்சாகத் தொடர். அழுத்தம் நிறைந்த வாழ்க்கையுலகில் மனதை இலேசாகவும்

இனிமையாகவும் ஆக்கிக்கொண்டு மகிழ்வு காண்பது எப்படி என்பதை எளிய நடையில், இளமை துள்ளச் சொன்ன தொடர் இது. வாசகர்களின் மகிழ்வான பின்னூட்டங்களும் ஆதரவும் அதற்குச் சான்று.

மனம் மகிழுங்கள் இப்பொழுது புத்தகமாக வெளிவந்துள்ளது. சென்னையின் பழம்பெரும் புத்தக நிறுவனமான பழனியப்பா பிரதர்ஸ் இந்நூலை வெளியிட்டுள்ளனர். 195 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 140 மட்டுமே. 36 ஆவது சென்னை புத்தகக்காட்சியில் (36th Chennai Book Fair - 2013) இப்புத்தகம் கிடைக்கும். 488 & 489 எண்கள் கொண்ட ஸ்டால்களில் இடம் பிடித்துள்ள இந்நிறுவனத்தினரின் கடையில் இந்நூல் விற்பனையில் உள்ளது.

படிக்கவும் பரிசளிக்கவும் உகந்த இந்த நூல் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு அளித்து மனதை மகிழ்விக்கும் என்பது நிச்சயம்.

மனம் மகிழுங்கள் கிடைக்குமிடங்கள்

e-max.it: your social media marketing partner

செய்திமடல்

புதிய பதிவுகளைப் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்:

Delivered by FeedBurner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker