முதலாம் சஊதி அரசு - நூல் விமர்சனம்

Written by நூருத்தீன் on .

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் வரலாறு, உதுமானிய கிலாஃபத்தின் அரசியல், Porte, முஹம்மது இப்னு சஊதும் அவருடைய சந்ததியினரும் நிகழ்த்திய போர்கள், திரியாஹ் நகரம் வஹ்ஹாபிகளின் தலைநகரானது, மக்காவின் ஷரீஃப்கள், மக்கா-மதீனாவைக் கைப்பற்ற நடைபெற்ற போர்கள்...

முஹம்மது அலி பாஷாவும் அவருடைய மகன் இப்ராஹீம் பாஷாவும் வஹ்ஹாபிகளை எதிர்த்து நிகழ்த்திய போர்கள், திரிய்யாஹ்வை இப்ராஹீம் பாஷா வென்றது, போரின் பின் விளைவுகள், இப்ராஹீம் பாஷாவிடம் தோற்ற அப்துல்லாஹ் இப்னு சஊதுக்கு இஸ்தான்புலில் அளிக்கப்பட்ட மரண தண்டனை...

உதுமானிய கிலாஃபத்துக்காகப் போரிட்ட இப்ராஹீம் பாஷா பிறகு அவர்களுக்கே எதிரியான விசித்திரம்...

The First Saudi State & The Story of Ad-Diriyyah என்ற இந்நூலில் எக்கச்சக்கத் தகவல்கள்.

வஹ்ஹாபிகள், சலஃபிகள், அவர்களை ஆதரிப்போர், எதிர்ப்போர், என்னதான் அவர்களுடைய கதை என்று அறிய விரும்புவோர் அனைவரும் இந்நூலை ஒருமுறையாவது வாசித்து விடுவது நல்லது.

அத்-திரிய்யாஹ் நகரை அரபு கலாச்சாரத்தின் (2030ஆம் ஆண்டிற்கான) தலைநகராக அறிவித்திருக்கிறது அரபு லீக் (ALECSO). அத்-திரிய்யாவை முக்கியமான சுற்றுலாத் தலமாக்க, வேகவேகமாகப் பல வேலைகளைச் செய்து வருகிறது சஊதி அரேபிய அரசு. மேலும் பல அரசியல் மாற்றங்கள் காத்திருப்பில் உள்ளன என்கிறது அரசியல் வானிலை. அவற்றையெல்லாம் பின் தொடரும்முன், அத்-திரிய்யாஹ்வின் முன்கதையை அறிய இந்நூல் உதவும்.

ஒவ்வொரு வரலாற்றிலும் வினோதம் துணைப் பாடமாக இடம்பெறும் என்பதுதானே வரலாறு.

நூல்: The First Saudi State & The Story of Ad-Diriyyah
ஆசிரியர்: Abu Haatim Muhammad Farooq
வெளியீடு: Salafi Publications, UK

-நூருத்தீன்

இதர விமர்சனங்கள்

e-max.it: your social media marketing partner

Tags: First Saudi State Ad-Diriyyah Wahhabi Salafi Ottoman Pasha Ibrahim Pasha Saud