மொழிமின் - சிராஜுல் ஹஸனின் விமர்சனம்

Written by சிராஜுல் ஹஸன் on .

‘மொழிமின்’ முழுமையாகப் படித்துவிட்டேன். அருமை. காலம் கருதி மொழியப்பட்டுள்ள கருத்துகள். சமூக ஊடங்களில் இயங்குபவர்களுக்கு வழிகாட்டிக் கையேடு.

ஆங்காங்கே சில பிழைகள் தெரிந்தன. “மனக் கஜானா” என்பதை “மனக் கருவூலம்” என்றும் சோஷியல் மீடியா போன்ற ஆங்கிலச் சொற்களை நல்ல தமிழிலும் தந்திருக்கலாம்.

பத்திரிகையில் எழுதுவதற்கும் சமூக ஊடகங்களில் எழுதுவதற்கும் உள்ள வேறுபாடுகளையும் ஓர் இடத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அது முற்றிலும் சரியே. பத்திரிகை அலுவலகங்களில் ஆசிரியர் குழு எச்சரிக்கையுடன் இருந்து, ஒவ்வொரு சொல்லையும் அது அச்சேறினால் என்ன எதிர்விளைவு ஏற்படும் என்பதைக் கவனத்தில்கொண்டே அனுமதிப்பார்கள். அது சமூக ஊடகங்களில் இல்லை. இங்கு தேவைப்படுவது “சுய தணிக்கை”. அது குறித்து இன்னும் கொஞ்சம் வலியுறுத்தியிருக்கலாம்.

அல்ஹம்துலில்லாஹ். நல்ல நூல். கருத்தும் அழகு. நடையும் அழகு.

இறைவன் தங்களின் எழுத்தாற்றலை மேன்மேலும் வளர்ப்பானாக.

-சிராஜுல் ஹஸன்

மொழிமின் - PDF பிரதியை தரவிறக்க க்ளிக்கவும்.

இதர விமர்சனங்கள்

 

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker