பா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்

Written by நூருத்தீன்.

அய்யா,

வணக்கம்.

அறிஞர் பா,தா, அவர்களின் தமிழ் நடையில் மயங்கிய ஒரு ரசிகன் நான். எனக்கு வயது 64 ஆகிறது.

அவரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவரை - உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அவரின் நூல்களான
1. ஜவாஹிருல் ஃபுர்கான் (4 பாகங்கள்),
2. குர்ஆன் மஜீத் (7 பாகங்கள்),
3. (ஆயிரத்தோர்ரிரவு) அரபு நாட்டுக் கதைகள் (? பாகங்கள்),
4. ஆரியருக்கோர் வெடிகுண்டு,
5. முதற்கமலம்,
6. ஹிப்னாட்டிஸ மெஸ்மரிஸ மனோவசிய சாஸ்திரம். ............ முதலிய ஏராளமான நூல்கள் உள்ளன. அவற்றை மறுபதிப்பு செய்யுங்கள். அல்லது மறுபதிப்பு செய்ய விரும்புகிறவர்களுக்கு அனுமதி அளியுங்கள். அல்லது உங்களுக்கு என்று ஒரு வளைதளத்தை வைத்துள்ளீர்கள். அதிலாவது அவற்றை வெளியிடுங்கள்.

எப்படியாவது அவரின் பெயர் மக்கள் மத்தியில் பல நூறு ஆண்டுகள் நின்று நிலவவேண்டும். செய்வீர்களா?

அன்புடன்,
'பழங்காசு' ப.சீனிவாசன்

22-06-2014

 

இதர விமர்சனங்கள்

e-max.it: your social media marketing partner

Comments   

0 #3 K. Subramanian 2018-03-06 08:53
நான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி, நற்றிணை, பரிசல், கருத்து=பட்டறை, உன்னதம் ஆகிய பதிப்பகங்கள் வழியாகவும். லயம் என்ற சிறுபத்திரிகை நடத்தியவன், பிரமிள் புத்தகங்கள் பல வெளியிட்டவன், சென்னை புத்தகக் காட்சியில் 4 புத்தகங்களும் இம்மாதம் 4 புத்தகங்களும் வெளிவந்துள்ளன. சீதக்காதி நொண்டிநாடகம் புதிய மறுமதிப்பு கண்டுள்ளது. என்னிடம் அரபிய இரவுக்கதைகளின் சில மொழிபெயர்ப்புகள் உள்ளன. அவற்றில் பா.தா. வெளியிட்ட அரபுநாட்டுக் கதை முதல் வெளியீடு, ஷாஜகான் புக் டிப்போ, 1953 இரண்டாம் பதிப்பு என்ற நூலும் ஒன்று. எத்தனை பாகங்களாக இது வந்துள்ளது என்று தெரியவில்லை. இதை ஒரே புத்தகமாக அச்சில் வெளியிட ஆசைப்படுகிறேன். எனது முகநூலில் இதுபற்றி நேற்று வெளியிட்ட 2 பதிவுகளைப் பார்க்கலாம். முழுத் தொகுதிகளும் கிடைக்குமா? வெளியிட அனுமதி அளிப்பீர்களா? என்பதைத் தெரியப் படுத்தினால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.
Quote
0 #2 ஜமாலுதீன் 2014-06-23 19:43
அந்தக் காலத்திலேயே பெரியவர் பா.தா. வெடிகுண்டு போட்டிருக்கிறார் என்ற தகவல் புதிது.
(நான் புத்தக வெடிகுண்டைச் சொன்னேன்)

"பழங்காசு" அழகிய புணைப்பெயர்.
Quote
0 #1 நூருத்தீன். 2014-06-22 23:40
ஐயா ‘பழங்காசு’ ப. சீனிவாசன் அவர்களுக்கு,

எங்களது தளத்திற்குத் தங்களது வருகையும் மடலும் மிகவும் உற்சாகமளிக்கிறது. இந்த இணையதளம் தொடங்கப்பட்ட முதன்மையான நோக்கங்களுள் ஒன்று பா. தா.வின் நூல்களை மின் வடிவில் சேமித்து வாசகர்களுக்கு எடுத்துச் செல்வது. அந்தப் பணி மெதுமெதுவே நடைபெற்று வருகிறது.

தற்சமயம் உள்ளவற்றின் சுட்டிகளைக் கீழே அளித்துள்ளேன்.

ஆரியருக்கொரு வெடிகுண்டு - http://darulislamfamily.com/family/bd-t/bd-books-t/133-aariyarukkoru-vedigundu.html
பா. தா.வின் கட்டுரைகள் - http://darulislamfamily.com/family/bd-t/bd-articles-t.html
தாருல் இஸ்லாம் - அக்டோபர் 1947 - http://darulislamfamily.com/di-magazine-t/118-oct-1947.html
தாருல் இஸ்லாம் - நவம்பர் 1947 - http://darulislamfamily.com/di-magazine-t/120-nov-1947.html

குர்ஆன் மஜீத் - முதல் தொகுதி - http://darulislamfamily.com/di-magazine-t/quran/127-volume-1.html
குர்ஆன் மஜீத் - மூன்றாம் தொகுதி - http://darulislamfamily.com/di-magazine-t/quran/129-volume-3.html
குர்ஆன் மஜீத் - நான்காம் தொகுதி - http://darulislamfamily.com/di-magazine-t/quran/130-volume-4.html
குர்ஆன் மஜீத் - ஐந்தாம் தொகுதி - http://darulislamfamily.com/di-magazine-t/quran/131-volume-5.html

விரைவில் இதர நூல்களும் இடம்பெறும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை பிறருக்கும் பகிருங்கள். தங்களது அன்பான ஆலோசனைகளை தொடர்ந்து தெரிவியுங்கள். மிக்க நன்றி.

-நூருத்தீன்
Quote

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker