தோழர்கள் - ஃபெரோஸ்கானின் விமர்சனம்

Written by ஃபெரோஸ்கான் on .

"தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்" என்பது பிரபலமான கூற்று. இஸ்லாம் என்றாலே அடிமைத்தனம், அறிவியலுக்கு எதிரானது, பெண்ணடிமைத்தனம், தீவிரவாதம் என்று ஊடகங்கள் கட்டமைத்த பிம்பத்தைத் தாண்டி இஸ்லாத்தை பிற சமூக மக்கள் புரிந்து கொள்ள நினைப்பதில்லை. முற்போக்கு பேசும் தோழர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஒரு முஸ்லீம் அல்லது கிறிஸ்துவ வாசிப்பாளர் நாத்திகம், முதலாளித்துவ, கம்யூனிஸ், செக்யூலரிஸ நூற்களை படிப்பது இயல்பு. ஆனால் மேற்கண்ட அத்துணை நூலகளையும் படிப்பவர்கள்கூட இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களின் பால் திரும்புவதில்லை.

இதற்கு முஸ்லீம் எழுத்தாளர்கள், பதிப்பகங்களும் ஒர காரணம். அதீத அரபு எழுத்துகள், குறியீடுகள் அந்த புத்தகங்களை அந்நியப்படுத்தும் என்றால் அது மிகையாகாது. முஸ்லிம்களுக்குக்கூட நபிகளாரை தெரிந்த அளவுக்கு நபிகளாரின் பணியில் முக்கிய பங்கு வகித்த தோழர்களுள் சில பிரபலமானவர்களைத் தவிர மற்றவர்களைத் தெரியாது.

ஆசிரியர் நூருத்தீன் இந்த முதல் பாகத்தில் அவ்வளவாக அறியப்படாத நபிகளாரின் 20 தோழர்களின் சுருக்க வரலாறை தனக்கேயுரிய லேசான ஹாஸ்யத்துடன் கூடிய அழகு தமிழில் எழுதியிருக்கிறார். என்பதை விட செதுக்கியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆண்டாண்-அடிமை என்றும் குலம்-கோத்திரம் என்றும் பிரிந்து கிடந்த அரபு சமூகத்தில் ஏகனை ஏற்றுக கொண்ட அடிமையும் ஆண்டையும் ஒன்று தான் எனும் சமத்துவ கோட்பாடு ஏற்படுத்திய அதிர்வுகளை, அது எதிர்கொள்ள நேரிட்ட இடர்களை 20 தோழர்களின் வழியாக அறியலாம்.

அதிலும் கப்பாபைப போன்ற அடிமைகளை முதலில் தோழர் என்று அழைத்த நபிகளார் அவரில் ஏற்படுத்திய மாற்றம், வறியவர்களின் பட்டியலில் முதன்மையாக இருந்த ஆளுநர், பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்த அபூதர்தா, மக்களின் வாழ்வுக்காக தங்கையின் கணவரை பழி வாங்கிய ஃபைரோஸ், சமூகத்தின் உயர் வகுப்பில் பிறந்து உடலை அடக்கக கூட துணி கிடைக்காமல் தியாக வாழ்வு வாழ்ந்த முஸ்அப் என புத்தகம் முழுக்க புனிதர்களின் அற்புத வரலாறு பரவி கிடக்கிறது.

சில போது நம்மால் இதை போன்ற வாழ்வது அடுத்து, இதை சிந்திப்பதே முடியாததைப போன்ற மலைப்பு. நிச்சயம் எவரும் எந்த நம்பிக்கை சார்ந்தவரும் அழகு தமிழில் தோழர்களை படிக்கலாம் தோழராக.

வெல்டன் தோழர் நூருத்தீன்.

-ஃபெரோஸ்கான்

நூல் கிடைக்குமிடங்கள்: Click here

இதர விமர்சனங்கள்

 

e-max.it: your social media marketing partner

Tags: விமர்சனம் தோழர்கள்

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker