YouTube-இல் தோழர்கள்

Written by Administrator.

சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் சகோ. நூருத்தீன் எழுதி வரும் நபித் தோழர்களின் வரலாறு முதலாம் பாகம் நூலாக வெளிவந்துள்ளது. இந்த வரலாற்றை ஆடியோ வடிவிலும் வெளியிட வேண்டும் என்று பல வாசகர்கள் கோரியிருந்தனர். ஸ்மார்ட்போன்களும், டேப்களும் பரவலான புழக்கத்தில் உள்ள சமகாலத்தில் இதனை YouTubeலும் வெளியிட்டால் வாசிக்க வாய்பில்லாத பலரையும் தோழர்களின் வரலாறு சென்றடையும் என்று சில வாசகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
 
அவற்றைக் கருத்தில் கொண்டு, DarulIslamFamily.com கன்னி முயற்சியாக முதல் அத்தியாயமான ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களின் வரலாற்றை YouTube-இல் வெளியிட்டுள்ளது. 
 
{youtube}PYqBWUcpH2Y{/youtube}
 
இதனை வாசித்த அளித்த சகோதரர் இபுனு அபீ, டைட்டில்கள் வடிவமைத்துத் தந்த சகோதரர் சர்தார் ஆகியோருக்கு தாருல் இஸ்லாம் குடும்பம் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இதிலுள்ள நிறை குறைகளை வாசகர்கள் எங்களுக்குத் தெரிவித்தால் அடுத்தடுத்த அத்தியாயங்களில் அவற்றைச் சரி செய்ய ஏதுவாகும். அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் ஏனைய அத்தியாயங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.
 

இதரச் செய்திகள்

e-max.it: your social media marketing partner

Add comment


Lock full review www.8betting.co.uk 888 Bookmaker