ஆப்பிளில் ‘தோழர்கள்’
சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் நூருத்தீன் எழுதிவரும் ‘தோழர்கள்’ எனும் நபித் தோழர்களின் வாழ்க்கை வரலாறு வாசகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்ற தொடர்.
இத் தொடரின் முதலாம் பாகம் செப்டெம்பர் 2011-இல் சத்தியமார்க்கம்.காம் பதிப்பகத்தின் முதல் வெளியிடாக நூலாக வெளிவந்து பரபரப்பாக விற்பனையானது. இப்பொழுது இந் நூல், ஐஃபோன் (iPhone), ஐபேட் (iPad), ஐமேக் (iMac) கணினி ஆகியவற்றில் வாசிப்பதற்கு ஏதுவாக, ஆப்பிளின் மென்பொருளான ஐபுக்ஸ் (iBooks) வடிவில் iTunes Store-இல் வெளிவந்துள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்!
ஐஃபோனுக்கான ஒரு வடிவாகவும், ஐபேடில் வாசிக்கும் வகையில் மற்றொரு வடிவாகவும் என இரு வடிவில் இந்நூல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் உபகரணங்களில் உள்ள iTunes Store மூலமாக இந் நூலை இலவசமாக வாங்கலாம்.
சமரசம் பத்திரிகையில் நூருத்தீன் எழுதிய குறுந்தொடரான ‘இரா உலா’ எனும் சிறு நூலும் இதற்குமுன் iTunes Store-இல் வெளிவந்துள்ளது.