மின்நூல் சந்தையில் இரா உலா
சமரசம் இதழில் எழுத்தாளர் நூருத்தீன் அவர்கள் இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் நீதிமிக்க ஆட்சியைக் குறித்து
‘இரா உலா’ எனும் பெயரில் தொடர் எழுதினார். அது வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது உங்களுக்கு நினைவிருக்கும்.
அந்தத் தொடர் தற்போது சிறு நூலாக iBook வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை ஆப்பிள் ஐ-டியூன் ஸ்டோரில் (Apple iTune store) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து, ஆப்பிளின் iPad, கம்ப்யூட்டர் ஆகியனவற்றில் எளிதாக வாசிக்க முடியும்.
ஆப்பிள் நிறுவனத்தின் மின்நூல் சந்தையில் தமிழ்ப் புத்தகங்கள் வெகு சொற்பமே. அவற்றுள் தமிழ் இஸ்லாமிய நூல்கள் இதுவரை இல்லை. அவ்வகையில் இதை முதல் முன்னோடி நூல் எனக் கூறலாம். இந்த முயற்சியில் ஈடுபட்ட நூருத்தீனுக்குப் பாராட்டுகள்.
நன்றி: சமரசம், 16-28 பிப்ரவரி 2014
புத்தக விபரங்களுக்கு இங்கே க்ளிக்கவும்
அச்சு வடிவில் வாசிக்க இங்கே க்ளிக்கவும்