நேர் பார்வை

Written by நூருத்தீன் on .

வாகனத்தை ஓட்டும்போது நேர் பார்வை;
அதில் பயணிக்கும் போதும் புத்தகம், ஃபோன் என்று நேர் பார்வை.

இப்படியே பழக்கமாகி, இன்று தலையைத் திருப்பி வெளியே வேடிக்கை பார்த்தால்தான் தெரிகிறது கூடவே ஓடிவருவதை அந்தக் காட்சிகள் இன்றும் நிறுத்தவில்லை என்பது.

தொலைந்துபோன பாலக வாழ்க்கையும் தஞ்சைப் பயணத்தின் சோழன் ரயில் ஜன்னலும் நினைவுப் பெட்டகத்திலிருந்து கிளர்ந்தெழுந்துவிட்டன.

அலட்சியத்தனத்தால் எத்தகு மகிழ்ச்சிகளைத் தொலைத்துக் கொண்டிருக்கிறேன்!

டிஜிட்டல் ஆக்கிரமிப்பிலிருந்து விலகி தினமும் சில நிமிடங்களாவது இந்த organic சமாச்சாரங்களை அனுபவிக்க வேண்டும்.

தவிர்த்துவிட்டு வாழ்வது அல்பத்தனம்.

e-max.it: your social media marketing partner

Comments   

0 #2 நூருத்தீன். 2016-09-25 12:56
ஊக்கமளிக்கும் வார்த்தைகள். மிக்க நன்றி அபூஸாலிஹா. தொடர்ந்து வருகை புரியுங்கள்.
Quote
0 #1 அபூ ஸாலிஹா 2016-09-24 13:29
வாட்ஸ் அப், மெயில்களில் தினசரி ஏகத்துக்கு வந்து குவியும் கமர்ஷியல் குப்பைகளுக்கு நடுவே, நான் தேடி வந்து வாசிக்கும் பகுதி, ரம்மியமான ஓலைச் சுவடி.

வியர்த்து விறுவிறுத்து தெருவில் சென்று கொண்டிருப்பவனுக்கு பிரம்மாண்ட ஷோரூமின் முன்புறம் தெருவில் கசியும் ஏஸி போல் தென்றலாய் இருக்கிறது. வாசித்த பின்னும் சில நிமிடங்கள் நின்றுவிட்டே அகல வைக்கிறது எழுத்துக்கள்.

இறைவன் துணை செய்வான். தொடருங்கள்!
Quote

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker