Print

தோழர்கள் விளம்பரம்

on . Posted in Books Advertisement-t

 


தோழர்கள்!

புனிதர்களின் அற்புத வரலாறு!

முதலாம் பாகம்

 


ஆசிரியர்: நூருத்தீன்

பதிப்பகம்: சத்தியமார்க்கம் பப்ளிகேஷன்ஸ்

பதிப்பு: 2011

பக்கங்கள்: 372

விலை: Rs. 150.00

 

 

 

 


இந்நூலைப் பற்றி

 

இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியபின், நாகரீக இலக்கணத்திற்கு உட்படாத முறையற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்த அதே அரேபியர்கள் சுடர் விடும் நாயகர்களாக உலா வந்தனர்.

முஹம்மது (ஸல்) அவர்களின் புகழ்பெற்ற தோழர்களின் வரலாறுகள் தமிழில் நிறைய உண்டு. ஆனால் பரவலாக அறியப்படாத தோழர்களின் வரலாற்றைக் கூறும் முதல் தொகுப்பு இது எனக் கூறலாம்.

இஸ்லாமிய தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் பா. தாவூத்ஷா அவர்களின் பேரனும் பா.தா. அவர்களின் இதழியல் சேவையில் தம்மை முற்றிலும் ஈடுபடுத்திக்கொண்ட அவர்தம் மகனார் என்.பி. அப்துல் ஜப்பார் அவர்களின் மகனுமான சகோ. நூருத்தீன் அவர்கள் இந்நூலை யாத்திருக்கிறார்.

பன்னூலாசிரியர் சகோ. அதிரை அஹ்மது அவர்கள் மதிப்புரையில் கூறியிருப்பது போன்று...

“இந்நூலை, நபித்தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டும். இத்தொகுப்பை எத்தகைய அருமையான மொழி நடையில் அமைத்துள்ளார் என்பதை அறிந்துணர்வதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும். மேன்மக்களான தோழர்களின் வரலாறுகள் மூலம் படிப்பினை பெறுவதற்காக மேலும் மேலும் படிக்க வேண்டும்.

 


புத்தகம் கிடைக்குமிடங்கள்

 

சென்னை

Shajidha Book Center
248 Thambu Chetty Street,
Mannady, Chennai - 600 001
Tel : +91 44-25224821
Mobile : +91 9840977758

Aysha Publications
78 Big Street
Triplicane, Chennai - 600 005
Tel : 91 44-43568745

Salamath Pathippagam
95, Linghi Chetty Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25211981; 42167320

Basharath Publishers
83, Angappa Naicken Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25225028
Mobile : +91-9444240535

குமரி

அன்ஸார்
Mobile : +91 9786220915

அதிரை

அப்துர் ரஹீம்
Mobile : +91 994482443

தம்மாம்

நஸ்ருத்தீன் ஸாலிஹ்
Mobile : +966 50-3841699

துபை

இம்ரான் கரீம்
Mobile : +971 55-9739408

குவைத்

அப்துல் கரீம்
Mobile : +965 97919697

கத்தர்

முஹம்மத் சர்தார்
Mobile : +974 55515648

சிங்கப்பூர்

சலாஹுத்தீன்
Mobile : +65 96902845

அமெரிக்கா

நூருத்தீன்
Mobile : +1 206-450-5973

 


 

 


இந்நூலுக்கு வாசகர்கள் இணையத்தில் பதிந்த கருத்துகள் சில...

 

Adirai Dawood - Dallas, Texas:

February 03, 2010 20:45

மாஷா அல்லாஹ். கட்டுரை அழகாக எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கதைகளை ஆங்கிலத்தில் முன்னர் கேட்டிருக்கிறேன். ஆனால் தாய் மொழியில் படிக்கும்போது அது பெருத்த தாக்கத்தை நிச்சயமாய் ஏற்படுத்துகிறது.

மஸ்தூக்கா:

February 05, 2010 13:37

நபித்தோழர்களின் வரலாறுகளைப் படித்திருக்கிறோம். ஆனாலும் இன்னமும் நிறைய படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தை கட்டுரையாளர் ஏற்படுத்தியிருக்கிறார். மெய்சிலிர்க்க வைக்கும் நல்ல எழுத்து நடை. நபித்தோழர்களின் சிறந்த முன்மாதிரி வாழ்க்கையை நம் அனைவருக்கும் பயனபடும் விதத்தில் வழங்கும் சகோதரர் நூருத்தீன் அவர்களுக்கும் “சத்தியமார்க்கம்“ தளத்திற்கும் பாராட்டுக்கள்.

பௌமி:

November 22, 2010 12:58

அஸ்ஸலாமு அலைக்கும்
சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களே..,

இறைவன் உங்கள் மீது அருள் புரிவானாக. நபித் தோழர்களின் வாழ்க்கை பாதை எவ்வளவு எளிமையானது! அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். மிக அருமையான கட்டுரை. ஆனால் தமிழில் நல்ல தகவல்கள் வாசகர்களிடம் சென்றடையாமல் போய் படிக்க முடியாமல் போனால் என்ன பயன். நபித்தோழர்களின் வரலாறுகளை நிறைய படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தை வாசகர்களிடம் ஏற்படுத்த வேண்டும். நபித்தோழர்களின் சிறந்த முன்மாதிரி வாழ்க்கையை நம் அனைவருக்கும் பயனபடும் விதத்தில் வழங்க வேண்டும்.

ஜமீல்:

February 17, 2010 09:36

கண்ணீர் வரவழைக்கும் வரலாறு, கவர்ந்திழுக்கும் நடை! தொடரட்டும், அல்லாஹ் உங்களுக்கு அருளட்டும்!

ர. சிராஜ் முஹம்மது:

March 06, 2010 10:26

அஸ்ஸலாமு அலைக்கும். அழகிய தொடர். நம் தலை முறையினர் அவசியம் படிக்க வேண்டிய தொடர். தொடர்ந்து எழுத வல்ல இறைவன் உதவட்டும்.


ஷா‍ஹ் மைந்தன்:

March 24, 2010 14:21

இது கதையல்ல சத்திய கீதத்தின் சரித்திர சகாப்தம்.இதைப்ப‌டிக்கும் போது,வெளிச்ச‌மும் வ‌ந்து நீராடி ப‌ளிச்சென‌ மாறும்.உள்ள‌ இருளெலாம் வெள்ளையாய் ஆகும்.க‌ள்ள‌மும் க‌ப‌டமும் க‌ருகியே போகும்.

இது ஒரு சுரக்கும் அமுத‌ம் இதை அருந்தினால் ஆண்மீக‌மே ஆண்மை பெறும்.ப‌குத்த‌றிவு ப‌ல‌த்தை பெறும்.

ந‌பித்தோழ‌ர்க‌ளுக்கு நிக‌ர் ந‌பித்தோழ‌ர்க‌ள் தான்.


Basheer:

March 30, 2010 10:33

யா அல்லா‍ஹ்! அது போன்ற ஒரு சமுதாயம் மீண்டும் உருவாவதற்கும் அதில் என் போன்றோர்கள் இருப்பதற்கும் அருள் புரிவாயாக!

Saif:

July 13, 2010 16:37

அருமையான ஆக்கம். உணர்வுகள் கண்களில் நீரை நிறைத்தன.
இன்ஷா அல்லாஹ் நாமும் அதுபோல் மாற வல்ல ரஹ்மான் அருள்புரியட்டும்.
ஈமானின் உதாராணம் அபூதல்ஹா(ரலி).
குர்-ஆனின் செயல் வடிவம் அபூதல்ஹா(ரலி).
தியாகத்தின் மொத்த உருவம் அபூதல்ஹா(ரலி)..
நமக்கு நல்லதோர் முன்னுதாரணம் அபூதல்ஹா(ரலி)..
நம் ஈமானும், இவரைப் போன்றே பலப்பட பிரார்த்திக்கின்றேன்.

abu hudhaifa:

July 16, 2010 20:50

//அடுத்த சிலநாட்களில் இருவருக்கும் திருமணம் நிகழ்வுற்றது. வியந்தது மதீனா. நகரெங்கும் அதே பேச்சு. அதற்குமுன் யாரும் கேள்விப்பட்டிராத விசித்திரம் அது.

"கேட்டியா செய்தியை! உம்முஸுலைம் அடைந்ததைப்போல் சிறப்பான மணக்கொடையை இதுவரை எந்தப் பெண்ணுமே பெற்றதில்லை. தன்னை மணக்க விரும்பியவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது மட்டுமே போதும் என்று கேட்டு வாங்கியிருக்கிறார். என்னே சிறப்பு!"

அன்று வந்து நுழைந்தாரே அபூதல்ஹா? நிரூபித்தார் ஒரு செய்தியை. வெறும் காதல் மயக்கத்திலோ, தான் நாடிய பெண்ணை எப்படியோ மணமகளாய் அடைந்தால் போதும் என்ற குறுகிய நோக்கத்திலோ அவர் நின்றுவிடவில்லை. இஸ்லாத்தை நேசித்தார். உள்ளார்ந்த நேர்மையுடன் பின்பற்ற ஆரம்பித்தார். மணமகனாய் நுழைந்தவர், மாபெரும் இஸ்லாமியச் சேவகனாய் ஆகிப் போனார்//

மாஷா அல்லாஹ் அருமையான வாசக அமைப்பு.சிந்திக்கத்தூண்டுகிறது.வாழ்த்துக்கள்.

Lareena Abdul Haq:

August 10, 2010 21:50

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்...

மாஷா அல்லாஹ்! மாஷா அல்லாஹ்! அற்புதமான ஆக்கம். மனதை அப்படியே கட்டிப்போடும் ஆற்றொழுக்கான அழகிய தமிழ்நடை.

//"தாகத்தில் தவிக்கும் நாவும் தொண்டையும் குளிர் நீரை ஹா... ஹா... வென்று அள்ளிப் பருகுவது போல்" பருக ஆரம்பித்தார் அவர். வறண்ட நிலம் நீரை ஏக்கத்துடன் ஈர்த்துக் கொள்வதைப்போல் அவரது இதயம் குர்ஆன் வசனங்களை உள்ளிழுத்துக் கொள்ள ஆரம்பித்தது. அகலத் திறந்து கொண்ட அவரது மனதில் இஸ்லாம் ஆலமர வித்தாக வேரூன்றியது!//

இடையிடையே போகிற போக்கில் அள்ளியெறிந்து செல்லும் உவமை நயம்.

ஒரு வரலாற்றுக் கதையைச் சொல்லுவது என்பது சுலபம்தான். ஆனால், அதனை இத்தனை உயிரோட்டமாய், உணர்ச்சி ததும்ப, படிப்போர் உள்ளங்களை ஈர்க்கும் வகையிலும் குறித்த வரலாற்றுச் சம்பவம் அப்படியே கல்லில் எழுத்துப்போல் பதியும் வண்ணமும் எழுதுவதென்பது அத்தனை சுலபமல்ல. சகோதரர் நூருத்தீனின் அற்புதமான மொழியாற்றல் வியந்து போற்றத்தக்கது, மாஷா அல்லாஹ்! அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக!

அருளாளனின் அடிமை:

August 18, 2010 14:00

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

அன்புச் சகோதரர் நூருதீன் அவர்களே அல்லாஹ் உங்கள் பணியை பொருந்திக் கொள்வானாக.

அந்த சத்திய சஹாபாக்களின் வாழ்க்கை படிக்கும் பொழுது நாமும் அந்த மதினத்து சமூகத்தில் பிறந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது. ஹைர் அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு மதினத்து சமூகத்தை இந்த மன்னில் மலரச்செய்வோம்.


Add comment