டயட்

by நூருத்தீன்

டயட் விழிப்புணர்வு அதிகமாகியுள்ள காலம் இது. பெருகி வரும் நோய்களும் அகால மரணங்களும் இந்த விழிப்புணர்வுக்குக் காரணமாக இருக்கலாம். என்னதான் வாழ்க்கையில் பிக்கல் பிடுங்கல் இருந்தாலும் யாருக்குத்தான் இறந்துபோக ஆசை?

பட்டியலும் அட்டவணையும் போட்டு ஏகப்பட்ட அறிவுரைகளை டயட்டு நிபுணர்கள் வழங்கினாலும், நான் அடிநாதமாக நினைப்பது என்னவோ “சோத்தைக் குறை; சோத்தைக் குறை”.

தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த அறிஞர் இமாம் இப்னுல் ஜவ்ஸீ தமது Discipling the Soul நூலில்

ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டுள்ளார். உக்பா அல்-ரஸ்ஸிபீ அல்-ஹஸனைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். அப்பொழுது உணவருந்திக் கொண்டிருந்த அல்-ஹஸன், உக்பாவையும் தம்முடன் உணவுன்பதற்கு வற்புறுத்த, ‘நான் ஏற்கெனவே வயிறு நிறைய உண்டுவிட்டேன்; இடமில்லை’ என்றிருக்கிறார் உக்பா.

“சுப்ஹானல்லாஹ்! ஒரு முஸ்லிம் வயிறு நிறையுமளவா உணவு உன்பான்?!” என்று வியந்திருக்கிறார் அல்-ஹஸன்.

‘அறிவுள்ளவன் வாழ்வதற்குப் போதுமான அளவு மட்டுமே உண்பான்; அறிவிலியோ உண்பதற்காகவே உயிர் வாழ்வான்’ என்று நம் வயிற்றில் அடிக்கிறார் இப்னுல் ஜவ்ஸீ.

இந்த அறிவுரையெல்லாம் நான் சாப்பிடும்போது நினைவில் வரவேண்டும் என்பதே இப்போதைக்கு என் பிரார்த்தனை.

 

Related Articles

Leave a Comment