அட்டை

Written by பா. தாவூத்ஷா.

 

ஆரியருக்கொரு * *

* * * வெடிகுண்டு

 

இதனை ஆக்கியோர்:
(நறையூர்) பா. தாவூத்ஷா சாஹிப், பீ. ஏ.

 

இதன் ஆசிரியரே இதனைச்
சென்னை, "கார்டியன்" அச்சுக்கூடத்தில்,
அச்சிட்டுப் பிரசுரித்திருக்கிறார்.

 

All Rights Reserved

1928

 

விலை அணா 12.


தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை,
நெ. 22, பிராட்வே, தபாற்பெட்டி 15,
சென்னை.

 

 


“சத்தியார்த்தப் பிரகாச”த்தைத் தமிழில் வெளியிட்டு நம் முஸ்லிம்களின் மனத்தை அவர்கள் புண்படுத்தி விட்டார்கள். இதற்கு வேண்டிய மறுப்பு நூலானது நமது “ஆரியருக்கொரு வெடிகுண்டே” யாகும்.

இதில் 236 பக்கங்களும், முன்னுரை, இஸ்லாமும் கத்தியும், வேதங்களின் அக்கிரமம், தயானந்தரின் சொல்லும் செய்கையும், அல் முஹ்மல் (வீணானது), வியபிசாரமன்று ஆனால் நியோகம், வேதங்களின் துர்ப்போதனை, வேதங்களைப் பற்றிய குருபாம் சிங்கின் அபிப்ராயம்,

அனுபந்தம்-1 வாமமார்க்கம், அனுபந்தம்-2 மத தாராளம் (குர்ஆனும் வேதங்களும்), அனுபந்தம்-3 இஸ்லாத்தின்மீது படுதூறு என்னும் விஷயங்களும், தயானந்தரின் ஞானாசிரியரான சுவாமி விரஜானந்தின் படமும் காணப்படுகின்றன.

இதைக் கையிலெடுத்தால் நிச்சயமாக ஆரிய சமாஜிகள் ஓட்டம் பிடிப்பார்களென்பது திண்ணம். இதைக் கண்ட ஆரியர்களும் பதில் சொல்ல முடியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ளுதற்கு இந்நூல் அவசியமாகும்.

- பா. தாவூத்ஷா

1928


 

 <<நூல் முகப்பு>>     <<அடுத்தது>>

 

முன்னுரை

Written by நூருத்தீன்.

ந் நூல் திருத்திப் பதிப்பித்த இரண்டாம் பதிப்பாக 1928-இல் வெளிவந்திருக்கிறது. சற்றொப்ப நூறு ஆண்டுகளுக்குமுன் வெளியான நூல். அதற்கேற்ப அக்கால மொழி நடை; வார்த்தைகள். பிறகு 1939-இல் மூன்றாம் பதிப்பாக வெளியிடும் முயற்சியில் தம் பிரதியில் சில திருத்தங்களும் சேர்க்கைகளும் செய்திருக்கிறார் ஆசிரியர் பா. தா. அந்த மூன்றாம் பதிப்பு வெளிவந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் இந்நூல் வெளியான காலத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்திருக்கிறது என்பதைப் பீடிகையின் முதல் பக்கத்தில் அடுத்த பதிப்பிற்காக பாட்டனார் பா. தா. சேர்த்துள்ள அடிக்குறிப்பில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அது பீடிகை - பகுதி 1-இல் கட்டம் கட்டப்பட்டுள்ளது.

இந்நூலை இங்கு பதிவேற்றும்போது சில ஒப்பனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • மூன்றாம் பதிப்பிற்காகக் குறிப்பிடப்பட்டிருந்த திருத்தங்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
  • நீண்ட நெடிய பத்தி, சிறு பத்திகளாகவும் நீண்ட நெடிய அத்தியாயங்கள், சிறு பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
  • அக்காலத்தில் அவர்கள் முறைப்படி எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் சமகால வாசகர்கள் வாசிப்பதற்கு ஏதுவாக உடைத்தோ / சேர்த்தோ மாற்றப்பட்டுள்ளன. ஆனால் எவ்விதத்திலும் பொருள் மாறுபாடு இராது. உதாரணத்திற்கு, ‘மொழிபெயர்த் துள்ளேன்’ என்ற வார்த்தை ‘மொழி பெயர்த்துள்ளேன்’ என்று மாறியிருக்கும்.

இந்நூலின் நவீன மாற்றம் அவ்வளவே! மற்றபடி இந்நூல் ஏன், எதற்கு, எப்படி என்பதை பீடிகை உணர்த்தும்.

அன்புடன்,
-நூருத்தீன்

நவம்பர் 20, 2014

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

 

 

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker