1947-10 04. ஒரு சில வரவேற்பு - I

Written by ஈ. வெ. ராமசாமி on .

அன்புள்ள நண்பர் உயர்திரு. ஆசிரியர் தாவூத்ஷா அவர்களுக்கு ஈ. வெ. ரா. வணக்கம்.

தங்களுடைய அன்பார்ந்த கடிதம் கிடைத்தது. அதில் தாங்கள்

“தாருல் இஸ்லாம்” பத்திரிகையை மீண்டும் மாதப் பத்திரிகையாக வெளியிடப் போவதை யறிந்து மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன். “தாருல் இஸ்லாம்” மீண்டும் வெளி வருவதில் அது எப்போதும் போலவே பகுத்தறிவை யொட்டிய சீர்திருத்தத்தில் மக்களுக்கு வழிகாட்டியாக இருக்குமென்று மனப் பூர்வமாகவே நான் கருதுவதோடு, திராவிட மக்களை “தாருல் இஸ்லாத்”தை வரவேற்று ஆதரித்துப் பெருமைப் படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள நண்பன்,

ஈ. வெ. ராமசாமி.


தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947
பக்கம்: 5

<<முந்தைய பக்கம்>>  <<அடுத்த பக்கம்>>

<<முகப்பு>>


 

e-max.it: your social media marketing partner