1947-10 03. அரிமா நோக்கு

Written by பா. தாவூத்ஷா.

ராஜ விசுவாசம்

பாக்கிஸ்தான் கேட்டோம்; பாக்கிஸ்தான் பெற்று விட்டோம். பத்துகோடி முஸ்லிம்களுள் பாதிக்கு மேற்பட்டவர் பாக்கிஸ்தானுக்கு

வெளியே “இந்தியன் யூனிய”னில் வசித்து வருகின்றனர். இவர்கள் இனி என் செய்தல் வேண்டு மென்பது அடுத்துள்ள பிரச்சினை. இச்சென்னை மாகாண சம்பந்தப்பட்டவரை நாம் 7 சதவிகிதச் சிறுபான்மை யினராயிருக்கிறோம். நமக்கோ தனித்தேர்தல் இல்லையாம். எனவே, நாம் இங்குள்ள பெரும்பான்மை யாட்சியுடன் இணங்கித்தான் வாழவேண்டியவர்களா யிருக்கிறோம். இந்த அரசாங்கம் நம்மை அல்லா(ஹ்)வுக்கும் ரஸூலுக்கும் மாறாய் நடக்க வேண்டுமென்று நிர்ப்பந்தப் படுத்தாதவரை நாம் இதனுடன் ஒன்றித்தே வாழ்தல் வேண்டும். “மூக்கில் சீழ்வடியும் நீகிரோவ அடிமையே உங்கள்மீது ஆட்சி புரியினும், சட்டப்படி நடைபெறும் அவ்வாட்சிக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும்,” என்று எம் பெருமானாரும் இயம்பி யிருக்கின்றார்கள். இதுதான் “இஸ்லாம்” இதுதான் முஸ்லிம்களின் “ராஜ விசுவாசம்”.

ஒரு பிரார்த்தனை

இஸ்லாத்தின் பிரசாரத்தில் அதிக அக்கரை காட்டி வருபவரும், பலமுறை ஹஜ்ஜு செய்திருப்ப வருமாகிய யாழ்ப்பாணத்து ஹாஜீ வி.எம். எம்.எஸ். அப்துல் காதிர் சாஹிபா - பத்திரா சிரியருங்கூட - சென்ற சிலவாரங்களாக நோய்வாய்ப் பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாக யாம் கேட்டுப் பெரிதும் வருந்துகிறோம். சமீபத்தில் சஹீஹ் புகாரீயைத் தமிழில் வெளியிட ரூ. 250 கொடுத்துதவியுள்ளார். இத்தகைய உத்தம முஸ்லிம் பெண்மணி சீக்கிரம் சுகமடைந்து, இஸ்லாத்துக்கு இன்னம் பன்மடங்கில் நல்லுதவி புரிய நாயன் நற்கிருபை கூர்ந்தருள்வானாக! அப்பால் தா. இ. வாயிலாய்ப் பெண்கள் பகுதிக்கென்று கட்டுரைகளும் வரைவார்கள், இன்ஷா அல்லாஹ்! நாம் துஆச் செய்வோமாக!


தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947
பக்கம்: 4, 5

<<முந்தைய பக்கம்>>  <<அடுத்த பக்கம்>>

<<முகப்பு>>


 

e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker