Articles Tagged ‘Radwan’

33. மவ்தூத் பின் அத்-தூந்தகீன்

அத்தியாயம் - 33

சுல்தான் முஹம்மது, தம் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீனை மோஸுலுக்கு அனுப்பி வைத்தார்; அவர் வந்து சேர்ந்தார்; மக்களால் வரவேற்கப்பட்டார்; ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் என்று பார்த்தோம். சுல்தான் முஹம்மதுவைப் பற்றி இங்கு சற்று நினைவூட்டிக் கொள்வோம்.

34. சென்னாப்ரா யுத்தம்

அத்தியாயம் - 34

அலெப்போவின் ரித்வான் விடுத்த அபயக்குரல் அப்பழுக்கற்ற வஞ்சகம். அச்சதியை அறியாமல் மவ்தூத் தலைமையிலான படை அலெப்போவை நெருங்கிய போது, இழுத்து மூடப்பட்ட நகரின் வாயில்கள்தாம் அவர்களை வரவேற்றன. உதவிக்கு விரைந்து வந்தவர்கள் வழிந்த வியர்வையைத் துடைத்து உதறிவிட்டு, திகைத்துப்போய் நின்றார்கள்.

35. ராஜா பால்ட்வினின் முடிவு

அத்தியாயம் - 35

சென்னாப்ரா யுத்ததில் மவ்தூத் அத்-தூந்தகீனிடம் தோல்வியைத் தழுவிய பரங்கியர்கள், அந்த அனுபவம் தங்களுக்குக் கற்றுத்தந்த பாடத்தை அலசினார்கள். முஸ்லிம்களின் படையெடுப்பையும் அவர்களது தாக்குதலையும் சமாளிக்க வேண்டுமெனில் தங்களுக்குள் மோதிக்கொள்வதை தற்காலிகமாகவாவது தள்ளி வைத்துவிட்டு ஒன்றிணைந்து எதிர்த்து நிற்பது அவசியம் என்பது அவர்களுக்குப் புரிந்தது.

37. காழீயின் களப்பணி

அத்தியாயம் - 37

சர்மதா போரின் வெற்றிச் செய்தி, மதிய தொழுகை நேரத்தில் அலெப்போவை எட்டியது. மகிழ்ச்சியில் திமிலோகப்பட்டது நகரம்! இத்தனை ஆண்டுகளாய் பொஹிமாண்ட், டான்க்ரெட், ரோஜர் என்று சிலுவைப் படைத் தலைவர்கள் ஒருவர் மாற்றி ஒருவருக்கு அஞ்சி, அலெப்போ அவர்கள் வசமாகி விடுமோ,

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker