Articles Tagged ‘முஹம்மது நபி’

எளிமையின் நாயகம்

பிறந்து வளர்ந்த நாற்பதாண்டுகளில் நபி பெருமானாருக்கு அப்படியொன்றும் வறிய வாழ்க்கை அமைந்துவிடவில்லை. அவர் பிறந்து வளர்ந்த குரைஷி குலம் மக்காவில் செல்வாக்குள்ள பிரிவு. அது பொருளாதார ரீதியாகவும் வலிமையுடன் திகழ்ந்த வம்சம். மக்காவுக்கும் சிரியாவுக்கும் இடையேயான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் அவ்வம்சம் திளைத்து வந்தது. பிறக்கும் முன் தந்தையையும் ஆறே வயதில் தாயையும் இழந்து பாட்டனாரின் பாதுகாப்பிலும் பின்னர் பெரிய தந்தை அபூதாலிபின் அரவணைப்பிலும் வாழ நேர்ந்ததே தவிர, தேவைகள் இருந்தனவே தவிர முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடும் வறுமை அச்சமயம் பிரச்சினையாக இருக்கவில்லை.

கானல் நீதி

பணி ஓய்வு பெற்ற 72 வயது ஆசிரியர் டாம் ப்ரிவெட்டைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தியது மியாமி நகரின் போலீஸ். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அவர் உயர்நிலைப் பள்ளி ஒன்றின் ஆசிரியராக இருந்தபோது, 14 வயது மாணவியைத் தம் வயப்படுத்தி, அடுத்த 5 ஆண்டுகள் பற்பல முறை உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார். வேறு சில மாணவிகளும் அவருக்கு இரையாகி இருந்த போதும் இப்பெண் மட்டும் ஓராண்டுக்கு முன் துணிந்து புகார் அளித்து விட்டார். ஓய்வில் இருந்தவரை கைவிலங்குப் பூட்டி இழுத்து வந்துவிட்டார்கள்.

சுட்டு விரல் சிகிச்சை

பின்னிப் பிணைந்த, ஒற்றுமையான சமூகம் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிநாதம். ஐவேளை கூட்டுத் தொழுகை, உறவினர்களுடன் பேண வேண்டிய கட்டாய உறவு, கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள், அண்டை வீட்டாரிடம் கொள்ள வேண்டிய நட்பு என்று சமூக வாழ்க்கையின் அங்கத்தில் ஏதொன்றையும் விட்டுவிடாமல் சட்டமாகவும் அறிவுரையாகவும் கடமையாகவும் இஸ்லாம் தெரிவித்துவிட்டது.

மவுண்ட் ஹிரா அகாடமியில் பேச்சுப் போட்டி

நெல்லிக்குப்பம் மவுண்ட் ஹிரா அகாடமி மாணவர்களின் கல்வி ஆர்வத்தை வளர்க்கும் விதமாக பாடத்திட்டம், இணைப் பாடத்திட்டம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. பாடநூல்களைத் தாண்டி கற்றலே முழுமையான கல்வி என்பது அதன் குறிக்கோள். அதன் ஓர் அங்கமாக 2021 அக்டோபர் மாதம் நிகழ்வொன்றை அது ஏற்பாடு செய்திருந்தது. மனித குலம் அனைத்திற்கும் முழுமையான முன்மாதிரியாகத் திகழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை மாணவர்கள் படித்து உணர “நபிகளாரின் நற்குணங்கள்”, "நபிகளார் – ஒரு முழுமையான முன்மாதிரி” என்ற தலைப்புகளில் 3, 4, 5 ஆம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பேச்சுப் போட்டியை அது நடத்தியது.

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker