தோழியர்

 

Author நூருத்தீன்
Publisher ஆயிஷா பதிப்பகம்
Edition 2nd
Published on 2019
Pages 194
Price ₹. 150.00

 

 

 

 


நூலைப் பற்றி...

நபிகள் நாயகத்தின் ‘தோழர்கள்’ (சஹாபாக்கள்) வரலாற்றுக்கு அடுத்து நாயகத்தின் ‘தோழியர்’ (சஹாபியாக்கள்) குறித்து நண்பர் நூருத்தீன் அவர்கள் எழுதியுள்ள அழகிய நூல் இது.

அழகுத் தமழில், சுவை குன்றாது, அதே நேரத்தில் மார்க்க நெறியும் பிறழாமல் ஆக்கித் தந்துள்ளார். ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு தோழியரின் வரலாற்றில் ஓர் அற்புதமான கணத்துடன் தொடங்குகிறது. பின் அது பின்னோக்கிச் சென்று அவரது வரலாற்றைச் சொல்கிறது. ஓர் உணர்ச்சி மிக்க வரலாற்றுச் சிறுகதையைப் படித்த திருப்தி நமக்குக் கிட்டுகிறது.

இஸ்லாமிய இலக்கியங்களைப் பொருத்த மட்டில் அவற்றிற்கு இரு பரிமாணங்கள் உண்டு. ஒன்று அவை இஸ்லாமியத்திற்கு மட்டுமின்றி தமிழுக்கும் வளம் சேர்ப்பவை. அந்த வகையில் இது தமிழுக்குச் சூட்டப்பட்ட இன்னோர் அணி.

-அ. மார்க்ஸ்

இந்நூலாசிரியரின் வித்தியாசமான, எளிய, இனிய, தனித்துவமான நடையழகு நாம் படிப்பது வரலாற்று நூல் எனும் நிலையிலிருந்து நம்மை விடுவித்து, சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த புதினம் ஒன்றை வாசிப்பதாக நம்மைக் கட்டி இழுத்துச் செல்கிறது.

அகக் கண்களில் காட்சிகளாகி என் புறக்கண்களைக் குளமாக்கினர் ‘தோழியர்’.

-பேரா. சயீதா பானு, M.A., B.Ed.

தோழியர் ஒவ்வொரு வீட்டிலும் பள்ளிகளிலும் மதரஸாக்களிலும் இருக்க வேண்டிய, படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

-Dr. ஆயிஷா அப்துல் ஹமீது, M.B.B.S.


இதர விபரங்கள்

First Edition: 2014

Publisher: சத்தியமார்க்கம் பதிப்பகம்


 

e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker