தோழியர் (Kindle)

ஆசிரியர் நூருத்தீன்
பதிப்பகம் அமேஸான்
பதிப்பு 2019
வடிவம் Paper Back
பக்கம் 188
விலை ₹. 50.00

நூலைப் பற்றி...

சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழியரின் வரலாறு.

நபிகள் நாயகத்தின் ‘தோழர்கள்’ (சகாபாக்கள்) வரலாற்றுக்கு அடுத்து நாயகத்தின் ‘தோழியர்’ (சகாபியாக்கள்) குறித்து நண்பர் நூருத்தீன் அவர்கள் எழுதியுள்ள அழகிய நூல் இது. நபியவர்களைப் பெற்ற அன்னை, மனைவிமார் என்பதுபோன்ற நெருங்கிய உறவினர்கள் அல்லாது அவரது காலத்தில் அவரோடு வாழ்ந்து, அவர் முன்வைத்த ஓர் இறைக் கொள்கையையும், இறைத் தூது குறித்த கருத்தாக்கத்தையும் முழுமையாக ஏற்று அவரோடு நின்று துயரங்களையும் துன்பங்களையும் ஏற்று தியாக வாழ்வொன்றை நிறைவு செய்த பதினேழு பெண்மணிகளை அழகு தமிழில் அறிமுகம் செய்கிறார் நூருத்தீன். (பேரா. மார்க்ஸ்)

வித்தியாசமான, எளிய, இனிய, தனித்துவமான நடையழகு, நாம் படிப்பது வரலாற்று நூல் எனும் நிலையிலிருந்து நம்மை விடுவித்து, சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த புதினம் ஒன்றை வாசிப்பதாக நம்மைக் கட்டி இழுத்துச் செல்கிறது. (பேரா. சயீதா பானு)

நூலின் ஆசிரியர் சகோதரர் நூருத்தீன் அவர்கள் எளிய, நயமான தமிழில் வரலாற்றை விவரித்திருப்பது, கடந்த கால சம்பவங்கள் கண் முன்னே விரிவது போல் ஓர் உணர்வைத் தோற்றுவிக்கிறது. (டாக்டர் ஆயிஷா அப்துல் ஹமீது )

இந்நூலாசிரியர் நூருத்தீன், நபித் தோழியர் ஒவ்வொருவரைப் பற்றியும் முழுமையாக அறிந்து கொள்வதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள், படித்துத் தேரும் வரலாற்று நூல்கள், தேடித் தரும் சான்றுகள் உளமாரப் பாராட்டப்பட வேண்டியவை! அவற்றிற்கான உசாத்துணை நூல்களின் பட்டியல் இந்நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நூல், உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இஸ்லாமிய மகளிர் வரலாறாகக் கற்பிப்பதற்குத் தகுதி வாய்ந்தது என்பது எங்களின் உறுதியான நம்பிக்கை. (சத்தியமார்க்கம்.காம்)

இஸ்லாமிய இலக்கியங்களைப் பொருத்த மட்டில் அவற்றிற்கு இரு பரிமாணங்கள் உண்டு. ஒன்று அவை இஸ்லாமியத்திற்கு மட்டுமின்றி தமிழுக்கும் வளம் சேர்ப்பவை. அந்த வகையில் இது தமிழுக்குச் சூட்டப்பட்ட இன்னோர் அணி. (பேரா. மார்க்ஸ்)

இந்திய அமேஸான் கடை: https://www.amazon.in/dp/B07NQTJQMZ/

அமெரிக்க அமேஸான் கடை: https://www.amazon.com/dp/B07NQTJQMZ/

 

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker